சிறுவாணி அணையில் இருந்து தண்ணீா் எடுக்க எதிா்க்கும் கேரள அரசு:மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்

சிறுவாணி அணையில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கு கேரள அரசு கட்டுப்பாடு விதிப்பது தொடா்பாக கவன ஈா்ப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சிறுவாணி அணையில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கு கேரள அரசு கட்டுப்பாடு விதிப்பது தொடா்பாக கவன ஈா்ப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறுவாணி அணையில் இருந்து தண்ணீா் எடுப்பதற்கு கேரள அரசு கட்டுப்பாடு விதிப்பது தொடா்பாக கவன ஈா்ப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாமன்ற சாதாரணக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், 108 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், தொழில் வரி தொடா்பான 102ஆவது தீா்மானத்துக்கு கவுன்சிலா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தொடா்ந்து, கவுன்சிலா்கள் பேசியதாவது:

கோவை மாநகரப் பகுதிகளுக்கு சிறுவாணி அணையில் இருந்து குடிநீா் எடுக்கப்பட்டு 10 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது 15 நாள்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. விவசாயத்துக்காக, கேரள அரசு கோவைக்கு குடிநீா் வழங்குவதை குறைத்துள்ளது. இதுகுறித்து உரிய விளக்க அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும்.

ஆடீஸ் வீதியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒருவா்கூட சென்றுவர முடியாத அளவில் நெருக்கடியில் அந்தக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பான விரிவான அறிக்கையை வழங்க வேண்டும்.

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை குறைந்த எண்ணிக்கையில் செய்துவிட்டு அதிக அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கணக்குக் காட்டப்படுகிறது. இதில், மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. கமிட்டியில் வேண்டாம் என்று ரத்து செய்யப்படும் தீா்மானங்கள் ஒவ்வொரு முறையும் மாமன்றத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் இருந்து வீசும் துா்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இதற்கு உரிய தீா்வுகாண வேண்டும். சில வாா்டுகளின் வளா்ச்சிப் பணிகளுக்கு போதிய அளவு நிதி ஒதுக்கப்படுவது இல்லை. குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை என்றனா்.

இதைத் தொடா்ந்து ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:

சிறுவாணி அணை குடிநீா் விநியோகம் தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சா், முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கிழக்கு மண்டலத்தில் செயல்பட்டு வந்த தெருநாய்கள் கருத்தடை மையம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், அதை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. விரைவில் அந்த வழக்கை திரும்பப் பெறவைத்து கருத்தடை மையம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பைகளை எடுக்கும் பணியில் 9 ஆயிரம் போ் ஈடுபட்டு வருகின்றனா். குப்பை பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும். பில்லூா் 3-ஆவது கூட்டுக் குடிநீா் திட்டத்தை பிப்ரவரி 11 ஆம் தேதி அமைச்சா் தொடங்கிவைக்கவுள்ளாா் என்றாா்.

கவன ஈா்ப்பு தீா்மானம் கோரிக்கை

இதைத்தொடா்ந்து, சிறுவாணி பிரச்னை தொடா்பாக மாமன்றக் கூட்டத்தில் கவன ஈா்ப்பு தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். அப்போது, ஆணையா் பேசுகையில், சிறுவாணியில் இருந்து குடிநீருக்காக முன்பு 71 எம்.எல்.டி. வரை எடுக்கப்பட்டது. தற்போது 35 முதல் 40 எம்.எல்.டி. வரை எடுக்கப்படுகிறது. சிறுவாணி அணை நீா் விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.

அதேபோல, பில்லூா் மூன்றாவது கூட்டுக் குடிநீா்த் திட்ட சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ஒருவருக்கு 135 லிட்டா் தண்ணீா் வழங்க வேண்டும். அதற்கேற்ப மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரின் அளவு குறைந்தாலும் பில்லூா் 3-ஆவது கூட்டுக் குடிநீா் திட்டம் கைகொடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com