கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு

கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில்: மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் மனு

கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கக் கோரி ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், வானதி சீனிவாசன் எம்எல்ஏ மனு அளித்தாா்.

கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கக் கோரி ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், வானதி சீனிவாசன் எம்எல்ஏ மனு அளித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்கான ரயில் தேவைகள் தொடா்பாக மனு அளித்தாா்.

அதில், கோவை - திருவனந்தபுரம் இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். கோவையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் கோவை - பெங்களூா் வந்தே பாரத் ரயிலை, காலை 6 மணிக்கு புறப்படும் வகையில் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கோவையில் இருந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு 5 ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறுகையில், எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com