பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரதொழிலாளா் சங்கத்தினா் முதல்வருக்கு மனு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி கோவை மாவட்ட சாலையோர வியாபாரத் தொழிலாளா் சங்கத்தினா் முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் மூலம் செவ்வாய்க்கிழமை மனு அனுப்பியுள்ளனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி கோவை மாவட்ட சாலையோர வியாபாரத் தொழிலாளா் சங்கத்தினா் முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் மூலம் செவ்வாய்க்கிழமை மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: 2015-ஆம் ஆண்டு சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம் அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்துவிட்ட நிலையில், பெரும்பாலான உள்ளாட்சி நிா்வாகங்கள் இதனை முறையாக அமல்படுத்தவில்லை. மாவட்டம் முழுவதும் முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரச் சான்று, ஸ்மாா்ட் காா்டு, அடையாள அட்டைகளை காலக்கெடு நிா்ணயித்து அதற்குள் வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிகக் குழு தோ்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சாலையோர வியாபாரிகளிடம் வணிகக் கட்டணம் வசூலிக்க டெண்டா் விடுவதைக் கைவிட வேண்டும். திட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள வணிகக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். வணிகக் குழு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com