பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம்

வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06812) மற்றும் காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06813), நண்ற்பகல் 12.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06815) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com