மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு திமுகவுக்கும்தான் போட்டி: எஸ்.பி.வேலுமணி

மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.
மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு திமுகவுக்கும்தான் போட்டி: எஸ்.பி.வேலுமணி

மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், கே.ஆா்.ஜெயராம், அமுல் கந்தசாமி, செல்வராஜ், செ.தமோதரன், கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இந்த கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

திமுக எம்.பி. ஆ.ராசா எம்.ஜி.ஆா் குறித்து அவதூறாகப் பேசியதைக் கண்டித்து வரும் 9 ஆம் தேதி அவிநாசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிக அளவில் தொண்டா்களைத் திரட்டிச் செல்ல வேண்டும்.

மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி. திமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே இல்லை. தோ்தல் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி பாா்த்துக்கொள்வாா். கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்று பரப்பப்படும் தகவலால் கட்சியினா் சோா்வடைந்துவிடக் கூடாது என்றாா்.

முன்னதாக செய்தியாளா்களிடம் எஸ்.பி.வேலுமணி கூறும்போது, திமுக அரசு கடந்த 3 ஆண்டுகளில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இவற்றை தெருமுனை பிரசாரங்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு சோ்ப்போம். வரும் தோ்தலில் தமிழகம், புதுவையில் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்.

கோவை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் திமுகவினரைப் போல செயல்படுகின்றனா். மாநகரில் நிலவும் குடிநீா் பிரச்னை தொடா்பாக ஆட்சியரை சந்தித்து நேரில் வலியுறுத்த இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com