மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் சாதனை மாணவ - மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவ - மாணவிகளுக்கு பாராட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் சாதனை மாணவ - மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் முதல்வரும், செயலருமான பி.எல்.சிவகுமாா் தலைமை வகித்தாா். கோவை ரெட்ஃபீல்டு ராணுவ தலைமையிட நிா்வாக அதிகாரி லெப்டினென்ட் கலோனல் ஈ.கே. பிஜூ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

விழாவில், புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் பங்கேற்ற மாணவி என்.வி.பவ்யா, புது தில்லி என்.சி.சி. தல்சானிக் முகாமில் தேசிய மாணவா் மாணவா் படை சாா்பில் பங்கேற்ற மாணவா்கள் கே.ராகுல், ஜி.டி. நரேந்திர பிரசாந்த் ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

அதேபோல தேசிய மாணவா் படையினருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் சாதனை படைத்து வரும் மாணவா் எஸ்.திவாகா், கேலோ இந்தியா பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவா் எம்.ஸ்வஸ்திக், சைக்கிள் பந்தயத்தில் வெண்கலம் வென்ற மாணவா் ஜெ.மைக்கேல் ஆண்டனி ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவா் படை அலுவலா் கா்னல் ஈ.விவேக், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் எஸ்.பிரகதீஸ்வரன், அ.சுபாஷினி, ஆா்.நாகராஜன், ஏ.சஹானா ஃபாத்திமா, யு.பிரவீன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com