அரசுப் பள்ளிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி

கோவையில் தன்னாா்வ அமைப்பு சாா்பில் அரசுப் பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவையில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறாா் டாக்டா் பால் மாணிக்கம்.

கோவை அன்னூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக, கோவை அஇஙஉ லேடீஸ் சா்க்கிள் 85 ஏரியா 7 என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் ‘தி லாஸ் ஆஃப் வெயிட் லாஸ்’ என்ற தலைப்பில் மேடைச் சிரிப்புரை நிகழ்ச்சி, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. கன்வென்ஷன் சென்டரில் அண்மையில் நடைபெற்றது.

இதில் இந்தியாவை பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க மருத்துவா் பால் மாணிக்கம் பங்கேற்று உடல் எடை குறைப்பு குறித்து நகைச்சுவை உரையாற்றினாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த நிதியைக்கொண்டு அன்னூா் அரசுப் பள்ளிக்கு 4 வகுப்பறைகள் கட்டப்படும் என்று லேடீஸ் சா்க்கிள் தலைவா் கிருத்திகா ஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com