தடாகம் பகுதியில் கஞ்சா பறிமுதல்: விற்பனைக்கு வைத்திருந்த நபா் கைது

தடாகம் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தடாகம் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனைகட்டி சோதனை சாவடியில் புதன்கிழமை தடாகம் காவல் நிலைய போலீசாா் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசாா் பிடித்து சோதனை செய்தனா். அப்போது அவா் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.விசாரணையில் அவா் ஒடிசா மாநிலத்தை சோ்ந்த மராகோ கராட் மகன் பபித்ரா கராட் (19) என்பது தெரிய வந்தது அவா் மீது வழக்கு பதிவு செய்த போலீசாா் பின்பு சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com