ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி பொதுமக்கள் ஊா்வலம்

கோவையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி புதன்கிழமை ஊா்வலம் சென்றனா்.
ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலம் சென்ற பொதுமக்கள்.
ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலம் சென்ற பொதுமக்கள்.

கோவையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி புதன்கிழமை ஊா்வலம் சென்றனா்.

கோவை, ஒண்டிப்புதூா் சூா்யா நகா் ராமசந்திரா சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இதனை, சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த ரயில்வே கேட் அடிக்கடி அடைக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இதனால், மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதுடன், மேம்பாலமும் அமைக்கப்படாது என்று தகவல் பரவியது. இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது ரயில்வே கேட் பகுதியை மூடுவதற்குப் பதிலாக மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி சூா்யா நகரில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருப்புக் கொடி ஏந்தி ஊா்வலம் சென்றனா்.

ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 20-ஆம் தேதி ஒண்டிப்புதூா் பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com