வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சரவணம்பட்டி செந்தூா்புரத்தைச் சோ்ந்தவா் சரவணன் (51). கூலித் தொழிலாளியான இவா் தனியே வசித்து வருகிறாா்.

இந்நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளாா். மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சரவணன் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா், திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com