பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் ரயில்வே கோட்டப் பகுதிகளில் சில இடங்களில் ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் பிப்ரவரி 19, 21, 23, 26- ஆகிய தேதிகளில் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

இந்த ரயிலானது, மேற்கண்ட தேதிகளில் கரூா் - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com