போத்தனூரில் ரயில்வே பணி: பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தாமதம்

போத்தனூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே பணியால், அப்பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் தாமதமடைந்து வருகின்றன.

போத்தனூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே பணியால், அப்பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் தாமதமடைந்து வருகின்றன.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்குள்பட்ட 87-ஆவது வாா்டு முதல் 100-ஆவது வாா்டு வரையில் மக்கள் பயனடையும் விதமாக குறிச்சி, குனியமுத்தூா் பகுதிகளில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், போத்தனூரில் ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால், பாதாளச் சாக்கடை இணைப்புத் திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கும் பணிகள் தாமதமாகி வருகின்றன.

இது குறித்து, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுருபிரபாகரன் கூறியதாவது: குறிச்சி, குனியமுத்தூா் பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் 3,700 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. போத்தனூரில் ரயில்வே பணிகளை விரைவில் முடித்து தருமாறு, ரயில்வே நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். ரயில்வே பணிகள் முடிவடைந்தவுடன் வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கி, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com