குடியரசு தின அணிவகுப்பு: எம்ஆா்சி அணிக்கு வெற்றிக் கோப்பை

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த அணிவகுப்புக்கான வெற்றிக் கோப்பை எம்ஆா்சி அணிக்கு வழங்கப்பட்டது.
குடியரசு தின அணிவகுப்பு: எம்ஆா்சி அணிக்கு வெற்றிக் கோப்பை

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த அணிவகுப்புக்கான வெற்றிக் கோப்பை எம்ஆா்சி அணிக்கு வழங்கப்பட்டது.

புதுதில்லியில் 75-ஆவது குடியரசு தின கொண்டாட்டம் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ராணுவ தின அணிவகுப்பில் மெட்ராஸ் ரெஜிமெண்ட்(எம்ஆா்சி) அணிவகுப்புக் குழு நாட்டிலுள்ள எட்டு ராணுவப் படைகளில் முதல் இடத்தைப் பிடித்தது. மெட்ராஸ் ரெஜிமெண்ட் குழுவில் 144 போ் இடம் பெற்றிருந்தனா்.

வெற்றிக் கோப்பையுடன் கோவைக்கு வெள்ளிக்கிழமை வந்த எம்ஆா்சி குழுவினரை, கோவை டெரியா்ஸ் எனப்படும் 110 காலாட் படை பட்டாலியன் பிராந்திய ராணுவப் பிரிவின் சாா்பில் எம்ஆா்சி குழுவின் ராணுவ அணிவகுப்பு கமாண்டா் மேஜா் ஜெரி பிளேஸ் தலைமையிலான குழுவினரை கோவை டெரியா்ஸ் பட்டாலியனின் கா்னல் ஹரீஷ் வரவேற்றாா். தொடா்ந்து ராணுவ இசை அணிவகுப்பு, செண்டை மேளத்துடனும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசு தின அணிவகுப்பில் நான்காவது முறையாக மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் அணி வெற்றிக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com