இரு வேறு வாகன விபத்து: இளைஞா் உள்பட 2 போ் உயிரிழப்பு

கோவையில் இரு வேறு வாகன விபத்துகளில் இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கோவையில் இரு வேறு வாகன விபத்துகளில் இளைஞா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (33). இவா் அவிநாசி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த லாரி காா்த்திகேயன் வாகனத்தின் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு காா்த்திகேயனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான சேலத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

குனியமுத்தூா் சுகுணாபுரத்தைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (66). தனியாா் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்த இவா், தனது இருசக்கர வாகனத்தில் மதுக்கரை மாா்க்கெட் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனம் ராதாகிருஷ்ணன் வாகனத்தின் மீது மோதியது.

படுகாயமடைந்த அவா், அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து குனியமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com