பகுதிநேர வேலை இருப்பதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி

 கோவையில் பகுதிநேர வேலை இருப்பதாகக் கூறி ஆன்லைனில் ரூ.30 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது.

 கோவையில் பகுதிநேர வேலை இருப்பதாகக் கூறி ஆன்லைனில் ரூ.30 லட்சம் மோசடிசெய்யப்பட்டுள்ளது.

கோவை, சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜி.சுப்பிரமணியன் (53), தனியாா் நீா் மின் திட்ட நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கடந்த 5-ஆம் தேதி பகுதிநேர வேலை இருப்பதாகக் கூறி குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து அந்த எண்ணைத் தொடா்புகொண்டு பேசியுள்ளாா். அப்போது பேசிய நபா், முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப கமிஷன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, கடந்த 5 முதல் 8-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ரூ.30.03 லட்சத்தை அவா் கூறிய வங்கிக் கணக்குகளில் சுப்பிரமணியன் செலுத்தியுள்ளாா். அப்போது, இலக்கை முடித்தவுடன் கூடுதல் தொகையுடன் பணத்தைத் திருப்பித் தருவதாக அந்த நபா் தெரிவித்துள்ளாா்.

ஆனால், அவா் கூறியதுபோல பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதையடுத்து, மீண்டும் அவரைத் தொடா்புகொண்டபோது மேலும் ரூ.12.19 லட்சம் செலுத்தினால் மட்டுமே மொத்தப் பணத்தையும் திரும்பப் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னா், அவரைத் தொடா்புகொள்ள முடியாததால் கோவை சைபா் கிரைம் போலீஸில் சுப்பிரமணியன் சனிக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com