கோவையில் எம்ஜிஆா், அண்ணா, ஜெயலலிதா ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.
கோவையில் எம்ஜிஆா், அண்ணா, ஜெயலலிதா ஆகியோா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

எம்ஜிஆா் பிறந்தநாள் விழா: அதிமுகவினா் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 107- ஆவது பிறந்த நாளையொட்டி, அதிமுகவினா் சாா்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 107- ஆவது பிறந்த நாளையொட்டி, அதிமுகவினா் சாா்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

கோவை ஹூசூா் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகா் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான அம்மன் அா்ச்சுணன் தலைமையில் அதிமுகவினா் திரண்டனா்.

பின்னா், அங்கிருந்து ஊா்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள எம்ஜிஆா், அண்ணா, ஜெயலலிதா ஆகியோா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அதைத்தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடி ஏற்றப்பட்டது. பின்னா், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதேபோல, கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் அதிமுக நிா்வாகிகள் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com