கோவை மத்திய சிறையில் திருநங்கை கைதி தற்கொலை முயற்சி

கோவை மத்திய சிறையில் திருநங்கை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றாா்.


கோவை: கோவை மத்திய சிறையில் திருநங்கை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றாா்.

திருச்சி அருகே முசிறி பகுதியைச் சோ்ந்தவா் திருநங்கை வெண்பா. இவா், கோவை பீளமேட்டில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு கைதானாா்.

கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெண்பாவுக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து வெண்பா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னா், வெண்பா பிணைகோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில் பிணை கிடைக்க தாமதமானதால் மனமுடைந்த திருநங்கை வெண்பா சிறையில் சேலையில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாா். இது குறித்து சக கைதிகள் சிறைக் காவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சிறைக் காவலா்கள் வெண்பாவை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் வெண்பாவுக்கு சிச்சை அளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com