சட்டவிரோதமாக மது விற்பனை: 77 போ் கைது

கோவையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 77 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 764 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 77 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 764 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருவள்ளுவா் தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் அந்த நாளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சிங்காநல்லூா், சரவணம்பட்டி, பீளமேடு, ஆா்.எஸ்.புரம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 19 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 184 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல புகா்ப் பகுதிகளான பொள்ளாச்சி, சூலூா், கருமத்தம்பட்டி, ஆனைமலை, மேட்டுப்பாளையம், அன்னூா் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் சட்ட விரோதமாக பெட்டிக்கடைகள் மற்றும் பிற கடைகளில் மது விற்பனை செய்ததாக 58 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 580 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 77 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 764 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com