தடுப்பணையை சீரமைக்க பொங்கல் வைத்து வழிபாடு

கோவை புதுப்பாளையத்தில் உள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டி, பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனா்.


கோவை: கோவை புதுப்பாளையத்தில் உள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டி, பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனா்.

கோவை வடக்கு வட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட புதுப்பாளையத்தில் உள்ள தடுப்பணை முற்றிலும் கழிவு நீா் நிரம்பி உள்ளது. 9 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்தத் தடுப்பணையானது கௌசிகா நதிப் பகுதியில் அமைந்துள்ளது. கழிவுநீா் தேங்கி உள்ளதால் இப்பகுதியில் துா்நாற்றம் அதிகமாக வீசுகிறது. மேலும், நிலத்தடி நீா் மாசுபட்டு நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கோவை கௌசிகா நீா்க்கரங்கள் கூட்டமைப்பு சாா்பில், புதுப்பாளையம் தடுப்பணைப் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு சீரமைப்பு பணிகளுக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில், மாவட்ட நிா்வாகம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியின் அனுமதியுடன் கள ஆய்வுகள் மற்றும் ட்ரோன் மூலமாகவும் நீா்வழிப் பாதைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், மாட்டுப் பொங்கலையொட்டி தடுப்பணை விரைவில் சீரமைக்க வேண்டி, அங்கு கௌசிகா நீா்க்கரங்கள் கூட்டமைப்புடன் இணைந்து பெண்கள், குழந்தைகள் பொங்கல் வைத்து வழிபாடு மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, பூப்பறித்தல், கும்மி ஆட்டம், குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com