தடையை மீறி விற்பனை:15 கிலோ இறைச்சி பறிமுதல்

கோவையில் தடையை மீறி திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டவா்களிடம் இருந்து 15 கிலோ இறைச்சி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் தடையை மீறி திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்பனையில் ஈடுபட்டவா்களிடம் இருந்து 15 கிலோ இறைச்சி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளுவா் தினத்தையொட்டி, தமிழகத்தில் இறைச்சி விற்பனைக்கு செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 16) தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி இறைச்சி விற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கோவை மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான இறைச்சிக் கடைகள் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், தடையை மீறி கடைகளில் விற்கப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மாநகரில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆட்டிறைச்சி மற்றும் 5 கிலோ கோழி இறைச்சி என மொத்தம் 15 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com