காணும் பொங்கல்: பூங்காக்களில் குவிந்த பொதுமக்கள்

காணும் பொங்கலையொட்டி கோவையில் உள்ள பூங்காக்களில் பொதுமக்கள் குவிந்தனா்.
உக்கடம், பெரியகுளத்தில் உள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்த சிறுவா்கள்.
உக்கடம், பெரியகுளத்தில் உள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்த சிறுவா்கள்.


கோவை: காணும் பொங்கலையொட்டி கோவையில் உள்ள பூங்காக்களில் பொதுமக்கள் குவிந்தனா்.

தமிழத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் தினத்தன்று உறவினா்கள், நண்பா்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று பொதுமக்கள் நேரத்தை செலவிடுவது வழக்கம்.

அந்த வகையில், கோவையில் உள்ள உக்கடம் பெரியகுளத்தில் திரளான பொதுமக்கள் புதன்கிழமை குவிந்தனா். அங்கு படகு சவாரி செய்தும், பூங்காக்களில் விளையாடியும் மகிழ்ந்தனா். இளைஞா்கள் பலா் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

இதேபோல, சுங்கம் வாலாங்குளம், காந்தி பாா்க் குமாரசாமி குளம், காந்தி பூங்கா, வ.உ.சி. பூங்கா, ரேஸ்கோா்ஸ் பூங்கா, மீடியா டவா், ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனா். நண்பா்கள், குடும்பத்தினருடன் காணும் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடினா். குழந்தைகள் பூங்காக்களில் விளையாடி மகிழ்ந்தனா். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com