காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

கோவையில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


கோவை: கோவையில் காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பாக 32 மனுக்கள் தொடா்பாக அந்த மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்களை நேரில் வரவழைத்து காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில் 26 மனுக்களுக்கு சுமூகமான முறையிலும், 6 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்தும் தீா்வு காணப்பட்டது.

அதேபோல, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீது தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com