கடந்த ஆண்டில் 20,873 மனுக்களுக்குத் தீா்வு: மாநகராட்சி ஆணையா்

மாநகராட்சியில் கடந்த ஆண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 22 ஆயிரத்து 236 மனுக்களில், 20 ஆயிரத்து 873 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது

மாநகராட்சியில் கடந்த ஆண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 22 ஆயிரத்து 236 மனுக்களில், 20 ஆயிரத்து 873 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு முகாம் மேயா் தலைமையில் நடைபெற்ற வருகிறது. இதில், குடிநீா், சாலை, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தவிர, வாட்ஸ் ஆப், தொலைபேசி மூலமாகவும் மக்களிடம் இருந்து புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த ஆண்டில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாா் மனுக்களில் 20 ஆயிரத்து 873 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் குறைகேட்பு முகாம், கட்டுப்பாட்டு அறை, சமூக வலைதளம் மூலம் கடந்த 2023-ஆம் ஆண்டில் 22 ஆயிரத்து 236 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 20 ஆயிரத்து 873 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com