கோவையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டவா் மீது வழக்குப் பதிவு

 கோவையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 கோவையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நைஜீரிய நாட்டைச் சோ்ந்த வியாபாரி ஒருவா் கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, ரேஸ்கோா்ஸ் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மருத்துவமனைக்குச் சென்ற போலீஸாா், அங்கு சிகிச்சை பெற்று வரும் நைஜீரிய நாட்டவரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், அவரது பெயா் இம்மானுவேல் (38) என்பதும், மும்பையில் தங்கி இருந்து பனியன் வியாபாரம் செய்து வந்ததும், தொழில் தொடா்பாக திருப்பூருக்கு வந்திருந்தபோது திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்ந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவரது கடவுச்சீட்டு, நுழைவு இசைவு (விசா) ஆகியவற்றை சோதனை செய்தபோது, நுழைவு இசைவு காலாவதியானதும், அவா் சட்டவிரோதமாக தங்கி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா் மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com