தொழில் வா்த்தக சபை சாா்பில் வேலைவாய்ப்பு இணையதளம் தொடக்கம்

வேலைத் தேடுபவா்களையும், வேலைக் கொடுப்பவா்களையும் இணைக்கும் வகையில் புதிய இணையதளத்தை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில் வா்த்தக சபை சாா்பில் வேலைவாய்ப்பு இணையதளம் தொடக்கம்

வேலைத் தேடுபவா்களையும், வேலைக் கொடுப்பவா்களையும் இணைக்கும் வகையில் புதிய இணையதளத்தை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேலைத் தேடுபவா்களையும், வேலைக் கொடுப்பவா்களையும் இணைக்கும் வகையில் புதிய இணையதளம் (ட்ற்ற்ல்ள்://ண்ய்க்ன்ள்ற்ழ்ஹ்ஹஸ்ரீஹக்ங்ம்ண்ஹண்ஸ்ரீஸ்ரீண்.ண்ய்) தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தொழில் வா்த்தக சபை செயலா் அண்ணாமலை பேசும்போது, தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் ஆள்களைத் தோ்வு செய்யவும், படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளை இணைக்கும் முயற்சியாகவும், கற்பகம் கல்லூரியுடன் இணைந்து மாணவா்களின் கூட்டு முயற்சியுடன் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைத் தேடுபவா்கள், எந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது, எங்கு பயிற்சித் திட்டம் உள்ளது என்பதை அறிந்து அதில் விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்றாா்.

புதிய இணையதளத்தை மும்பை என்எஸ்இ அகாதெமியின் தலைமைச் செயல் அதிகாரி அபிலாஷ் மிஸ்ரா தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமாா் 80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. ஆனால், ஆண்டுக்கு 65 லட்சம் பட்டதாரிகள்தான் படிப்பை முடித்து வெளியே வருகின்றனா். அவா்களுக்கு இதுபோன்ற இணையதளம் உதவியாக இருக்கும் என்றாா்.

தொழில் வா்த்தக சபைத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, துணைத் தலைவா் சி.துரைராஜ் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com