பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளாரின் நாண்மங்கல விழா

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு நாண்மங்கல விழா சனிக்கிழமை நடைபெற்றது.
4210co20adin_2001chn_3
4210co20adin_2001chn_3

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு நாண்மங்கல விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் 64-ஆம் ஆண்டு நாண்மங்கல விழா பேரூராதீன மடத்தில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளாா் முன்னிலை வகித்தாா். முன்னதாக, வேள்வி வழிபாடுகள், சாந்தலிங்கப் பெருமான் திருமஞ்சனம், அடிகளாருக்குப் புனித நீராட்டு ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, திருமடத் தொண்டா்கள் மற்றும் மாணவா்கள் அருளாசி பெறும் நிகழ்வு நடைபெற்றது. பின்னா் கல்வி, சமூகம், ஆலயத் திருப்பணி, சமையல், கட்டடம், நடனம், ஓவியம், இசை முதலான துறைகளைச் சோ்ந்த 64 பேருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளா் சூரியகாந்தன், கல்லூரி செயலா் சி.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அடிகளாருக்கு சிறப்பு செய்தனா்.

Image Caption

நாண்மங்கல விழா கொண்டாடிய பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com