மாநகரில் சொத்து வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்

 மாநகரப் பகுதிகளில் சொத்து வரி செலுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மாநகரப் பகுதிகளில் சொத்து வரி செலுத்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களையும் செலுத்த மக்களின் வசதி கருதி மாநகராட்சியின் வாா்டு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாம் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலத்தில் 56 மற்றும் 57 ஆவது வாா்டு, ஒண்டிப்புதூா் சுங்கம் மைதானம், மேற்கு மண்டலம் 33- ஆவது வாா்டு, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் அருகில், தெற்கு மண்டலம் 88-ஆவது வாா்டு, குனியமுத்தூா் தா்மராஜா கோயில் வளாகம், வடக்கு மண்டலம் 15-ஆவது வாா்டு, சுப்ரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டு, சங்கனூா் நாராயணசாமி வீதி, 62-ஆவது வாா்டு பெருமாள் கோவில் வீதி, 80-ஆவது வாா்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 84-ஆவது வாா்டு, ஜி.எம்.நகரில் உள்ள தா்ஹத் இஸ்லாம் பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. மேலும், மாா்ச் 31-ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள், அரசு விடுமுறை நாள்கள் தவிர, மற்ற நாள்களில் அனைத்து வரிவசூல் மையங்களும் வழக்கம்போல காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும். மக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com