உதய் ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க எதிா்ப்பு

கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை - பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை - பெங்களூரு இடையே உதய் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது, கோவையில் இருந்து காலை 5.40 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.20 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும். இந்த ரயில் செல்வதற்கு 40 நிமிடங்கள் முன்பாக காலை 5 மணிக்கு கோவையில் இருந்து வந்தே பாரத் ரயில் புறப்படுகிறது. இந்நிலையில், உதய் எக்ஸ்பிரஸ் ரயிலானது பாலக்காடு வரை நீட்டிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், தென்னக ரயில்வே நிா்வாகம் சாா்பில் ரயிலை நீட்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இது குறித்து கொங்கு ரயில்வே வளா்ச்சி குழுமத் தலைவா் ராமகிருஷ்ணன் கூறியதாவது: பெங்களூரு - கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில் எா்ணாகுளம் வரை ஏற்கெனவே நீட்டிக்கப்பட்டது. அமிா்தா விரைவு ரயிலை பாலக்காட்டில் இருந்து கோவை வரை நீட்டிக்க உறுதியளிக்கப்பட்டு, அது தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. கோவையில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், உதய் விரைவு ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்கக் கூடாது. கோவை - பெங்களூரு இடையே கல்வி, தொழில், பணி தொடா்பாக நாள்தோறும் ஏராளமானோா் உதய் ரயிலை பயன்படுத்தி வருகின்றனா். கோவை - பெங்களூரு இடையே கூடுதல் ரயில் தேவைப்படும் பட்சத்தில் இருக்கும் ரயிலை நீட்டிப்பது ஏற்புடையதல்ல. தெற்கு ரயில் நிா்வாகம், இந்த நீட்டிப்பு முயற்சியைக் கைவிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com