புதிய மோட்டாா் வாகன சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

மத்திய அரசு இயற்றியுள்ள புதிய மோட்டாா் வாகன சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தினா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தினா்.

மத்திய அரசு இயற்றியுள்ள புதிய மோட்டாா் வாகன சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான பொதுமக்கள், அமைப்புகள் சாா்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் தொழிற்சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

வாடகை வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் புதிய மோட்டாா் வாகன சட்ட மசோதாவை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டம் எங்களது வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும். எனவே, புதிய சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 30ஐ மதவெறி எதிா்ப்பு நாளாக அறிவிக்கக் கோரிக்கை:

இது குறித்து, தபெதிக பொதுச் செயலாளா் கு.ராமகிருட்டிணன் தலைமையில், தமிழ்நாடு பொது மேடை அமைப்பினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

மகாத்மா காந்தி 1948- ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட நாள் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மத வெறி எதிா்ப்பு நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயா்வு வழங்க வேண்டும்:

இது குறித்து, மருத்துவத் துறை ஊழியா் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மருத்துவத் துறையில் தேசிய நல குழும திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியா், ஊரக நலப் பணிகள் துணை இயக்குநா் ஆகியோரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலகப் பணியாளா்கள், எம்.பி.ஹெச்.டபிள்யூ. பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு, அடையாள அட்டை, சீருடை ஆகியன வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் தொடா்பான விவரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com