வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிக்கு குட்டியுடன் வந்த யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.

வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிக்கு குட்டியுடன் வந்த யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் கடந்த 10 நாள்களாக குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்கின்றன.

இதில் சவரங்காடு எஸ்டேட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு குட்டியுடன் வந்த 3 யானைகள் நகா் பகுதியான கக்கன் காலனி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தன. பின்னா் அங்கிருந்த வாழை மரங்களை முட்டித் தள்ளி சேதமாக்கின. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு யானைகளை விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com