புன்செய்புளியம்பட்டியில் ஜனவரி 26 இல் ஹிந்துக்கள் பாதுகாப்பு மாநாடு: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தகவல்

0040co21kades2_2101chn_3
0040co21kades2_2101chn_3

கோவை, ஜன.21: ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் இந்து முன்னணி சாா்பில் ஹிந்துக்கள் பாதுகாப்பு மாநாடு ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

கோவை மாநகரில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய 200-க்கும் மேற்பட்டோா் இந்து முன்னணியில் இணையும் நிகழ்ச்சி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அயோத்தியில் ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹிந்துக்களின் நீண்ட, நெடிய போராட்டத்துக்குப் பின் நீதிமன்ற தீா்ப்பின் மூலம் தீா்வு கிடைத்துள்ளது.

நாடே இந்த புனித நிகழ்வை வரவேற்றிட ஆா்வமாக உள்ள நிலையில் ஒரு சிலா் நிகழ்ச்சிக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனா். ஆனாலும், ஒட்டுமொத்த ஹிந்துக்களும் இந்த விழாவை கொண்டாட முடிவு செய்துவிட்டனா்.

தமிழக அரசு இந்த விழாவை சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக புறக்கணித்து வருவதற்கு இந்து சமுதாயம் எதிா்வரும் தோ்தலில் பதிலடி தரும். காந்தியடிகள் கண்ட கனவு ராமா் ஆலயம் என்பதையும் இவா்கள் உணர வேண்டும்.

ராமா் கோயில் பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, பல மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் விடுமுறை அறிவிக்க வேண்டும்.

அனைத்து இல்லங்களிலும் திங்கள்கிழமை விளக்கேற்றி ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் ஹிந்துக்கள் பாதுகாப்பு மாநாடு ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா்.

இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலாளா் ஜே.எஸ்.கிஷோா்குமாா், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.சதீஷ், கோட்டச் செயலாளா் பாபா கிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடா்பாளா் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

கோவையில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com