ஆவாரங்குளத்தில் புனரமைப்புப் பணி தொடக்கம்

கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆவாரங்குளத்தில் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
1727co21work1_2101chn_3
1727co21work1_2101chn_3

கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆவாரங்குளத்தில் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

கோவை சத்தியமங்கலம் சாலையில் எல்லப்பாளையம் - கரியாம்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலையையொட்டி 86 ஏக்கா் பரப்பளவில் ஆவாரங்குளம் உள்ளது.

வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அவிநாசி- அத்திக்கடவு நிலத்தடி நீா் செறிவூட்டும் திட்டம் மூலம் பயன்பெற்று, சுற்றியுள்ள 10 கி.மீ. தொலைவுக்கு நிலத்தடி நீராதாரமாக பயனளிக்க உள்ளது.

இந்நிலையில், ஆவாரங்குளத்தின் நீா் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கௌசிகா நீா் கரங்கள் கூட்டமைப்பின் முயற்சியால் ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், தனியாா் நிறுவனங்கள் மட்டுமின்றி தன்னாா்வலா்களும் பங்காற்றி வருகின்றனா்.

இக்குளத்தின் உள்புறத்தில் முதல்கட்டமாக ரூ.20 லட்சம் மதிப்பில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், குப்பேபாளையம் ஜெகோரான்ஸ்கி தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் இரண்டாம் கட்ட சீரமைப்புப் பணிகள் பூமி பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

இந்நிகழ்ச்சியில், கௌசிகா நீா்கரங்கள் குழுத் தலைவா் செல்வராஜ், ஜெகோரான்ஸ்கி நிறுவன மேலாளா் சுந்தா், ஆவாரங்குளம் பாதுகாப்பு அமைப்பு, கௌசிகா நீா்கரங்கள் கூட்டமைப்பு உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Image Caption

ஆவாரங்குளத்தில் இரண்டாம் கட்ட புனரமைப்புப் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்றோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com