செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணி தீவிரம்: மேயா், ஆணையா் ஆய்வு

கோவை, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மேயா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

கோவை: கோவை, காந்திபுரம் மத்திய சிறைச் சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மேயா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

கோவை மத்திய சிறைச் சாலை, காரமடை அருகே உள்ள பிளிச்சி என்ற இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக சிறைத் துறை மைதானத்தில் மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் உள்ள 45 ஏக்கா் பரப்பளவு இடத்தில் ரூ.172. 21 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.

சிறைச் சாலை இடமாற்றம் செய்த பின்னா், மீதமுள்ள இடத்தில் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில், காந்திபுரம் சிறைச் சாலை மைதானத்தில் செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

இப்பணியை மேயா் கல்பனா, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் வகையில் உலகத் தரத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்தப் பூங்காவில் வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வகையில் குறிஞ்சி வனம், செம்மொழி வனம், மர வனம் ஆகியவை ஏற்படுத்தப்படுகின்றன. இந்தப் பூங்கா வளாகத்தில் விழா மண்டபங்கள், உள்ளரங்கம், வெளியரங்கம், பன்னடுக்கு வாகன நிறுத்தம், விற்பனை அங்காடிகள், ஓய்வறைகள், திறந்தவெளி அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன. தற்போது, அடித்தளம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com