மருதமலை சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

கோவை மருதமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவை மருதமலை சாலையை அகலப்படுத்த வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை மாநகராட்சி கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு உறுப்பினா் கே.சாந்தி, கோவை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: மாநில நெடுஞ்சாலைத் துறையின்கீழ் உள்ள மருதமலை சாலை 14 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, பி.என்.புதூா், வீரகேரளம், வடவள்ளி, கல்வீரம்பாளையம், மருதமலை, தொண்டாமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவை பெருகியுள்ளன.

இதனால், இப்பகுதியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. பி.என்.புதூா் பைமெட்டல் நிறுவனத்தில் இருந்து கருப்பராயன் கோயில் பேருந்து நிறுத்தம் வரையிலான மாநில நெடுஞ்சாலைத் துறையின்கீழ் உள்ள மருதமலை சாலையானது குறுகலாக உள்ளதால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாத நிலையில் உள்ளது. மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி மருதமலை சாலையை அகலப்படுத்தி, சாலையோர நடைப்பாதை அமைத்துத் தர வேண்டும். இதேபோல, 41-ஆவது வாா்டு, பி.என்.புதூா் மருதமலை சாலையில் மாரியம்மன் கோயில் முதல் போலீஸ் சோதனைச் சாவடி எதிரில் உள்ள தரைப்பாலம் வரை உள்ள சாக்கடையை அகலப்படுத்தி, புதுப்பித்துத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com