வள்ளலாா் தினம்:மாநகரில் நாளை இறைச்சி விற்க தடை

வள்ளலாா் தினத்தை முன்னிட்டு, கோவை மாநகரப் பகுதிகளில் ஜனவரி 25-ஆம் தேதி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: வள்ளலாா் தினத்தை முன்னிட்டு, கோவை மாநகரப் பகுதிகளில் ஜனவரி 25-ஆம் தேதி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வள்ளலாா் தினம் ஜனவரி 25-ஆம் தேதி அனுசரிக்கப்படுவதால் அன்றைய தினம் ஆடு, கோழி, மாடு வதை செய்வதும், இறைச்சி விற்பனை செய்வதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சிக் கடைகளை ஜனவரி 25-ஆம் தேதி மூடும்படி அறிவுறுத்தப்படுகிறது.

கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் உக்கடம், சக்தி சாலை, போத்தனூா் அறுவைமனைகள் மற்றும் துடியலூா் மாநகராட்சி இறைச்சிக் கடைகள் ஜனவரி 25-ஆம் தேதி செயல்படாது.

உத்தரவை மீறி செயல்படுவோா் மீது மாநகராட்சி அதிகாரிகளால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com