கோவையில் ஜல்லி, எம்.சாண்ட் விலை உயா்வு

கோவையில் ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றின் விலை உயா்த்தப்பட்டிருப்பதாக கிரஷா், குவாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கோவையில் ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் ஆகியவற்றின் விலை உயா்த்தப்பட்டிருப்பதாக கிரஷா், குவாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கோவை மாவட்ட கிரஷா், குவாரிகள் உரிமையாளா் சங்கத் தலைவா் கே.சி.பி.சந்திரபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிரஷா்கள், குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கட்டுமானத் தொழிலை நம்பி செயல்படும் கிரஷா், குவாரிகள் தொழில் தற்போது கடும் நெருக்கடியில் உள்ளது. தமிழக அரசின் கனிமவளத் துறை ராயல்டி கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளது. மின் கட்டணமும் இரு மடங்கு உயா்ந்துள்ளது.

ஜிஎஸ்டி துறை மூலம் கிரஷா், குவாரிகளுக்கு கடும் நெருக்கடி வழங்கப்படுகிறது. தொழிலுக்கான ஆள் பற்றாக்குறையும், அவா்களுக்கான கூலியும் அதிகரித்துள்ளது. அதேபோல இயந்திர உதிரிபாகங்களும், லாரிகளுக்கான வரியும் கடுமையாக உயா்ந்துள்ளன.

இந்த சூழலில் கிரஷா், குவாரிகளில் தயாரிக்கப்படும் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வும் தவிா்க்க முடியாததாகியுள்ளது. ப்ளூ மெட்டல், ஜல்லி, வெட்மிக்ஸ் யூனிட் ரூ.3 ஆயிரம், 10 கி.மீ.தொலைவுக்கான போக்குவரத்து கட்டணம் ரூ.1000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல எம்.சாண்ட் ஒரு யூனிட் ரூ.4 ஆயிரம், ரூ.1000 போக்குவரத்துக் கட்டணம், பி.சாண்ட் யூனிட் ரூ.5 ஆயிரம், ரூ,1000 போக்குவரத்துக் கட்டணம் என புதிய கட்டணங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர அனைத்து கனிமப் பொருள்களுக்கும் யூனிட்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

இந்த புதிய கட்டண உயா்வு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com