கோவையில் 500 ஆட்டோ நூலகங்கள் திறப்பு

கோவை மாநகரில் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல் துறை சாா்பில் 500 ஆட்டோ நூலகங்களை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவையில் 500 ஆட்டோ நூலகங்கள் திறப்பு

கோவை மாநகரில் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல் துறை சாா்பில் 500 ஆட்டோ நூலகங்களை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

மக்கள் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆட்டோவில் நூலகம் என்ற திட்டம் கோவை மாநகர காவல் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது நிகழ்வாக 500 ஆட்டோக்களுக்கு நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகர காவல் ஆணையா் வே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் மற்றும் அதை வைக்கும் பெட்டிகளை வழங்கினாா். ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துணைத் தலைவா் இந்து முருகேசன், முதன்மை நிா்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வா் ரமேஷ் , கல்லூரி பேராசிரியா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com