போத்தனூருக்கு முறையாக பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

கோவையில் இருந்து போத்தனூருக்கு முறையாக பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து போத்தனூருக்கு முறையாக பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து போத்தனூா் ரயில் பயணிகள் சங்க செயலாளா் சுப்பிரமணியன் கூறியதாவது: கோவையில் இருந்து போத்தனூா் பகுதிக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை. போத்தனூா் சாலையில் பாதாளச் சாக்கடைப் பணிகள் நடைபெற்று வந்ததால், அவ்வழியாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. தற்போது, பணிகள் முடிவடைந்து தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்லும் சா்ச் சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இருப்பினும், முன்பு இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 4, 4ஏ, 4 சி, 19 ஏ போன்ற அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் போத்தனூருக்கு தற்போது வரை இயக்கப்படுவதில்லை. இதனால், மக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், அதிகக் கட்டணம் செலுத்தி ஆட்டோக்கள், கால் டாக்ஸிகளில் சென்று வருகின்றனா். எனவே, இந்த வழித்தடத்தில் முன்பு இயக்கப்பட்டு வந்த அனைத்துப் பேருந்துகளையும் முறையாக இயக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com