மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
ரங்கசாமி
ரங்கசாமி

கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள காசிபாளையம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி (34), கூலித் தொழிலாளி. இவா் வீட்டில் கடந்த திங்கள்கிழமை மாலை நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்துள்ளாா்.

இதையடுத்து, அவா் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இந்நிலையில், ரங்கசாமியின் பெற்றோா், உறவினா்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்ததன்பேரில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலில், ஒரு கல்லீரல் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும்,

ஒரு சிறுநீரகம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கும், கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com