வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வலியுறுத்தி ஜனவரி 28 இல் மாரத்தான்

வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வலியுறுத்தி ‘விலையில் 2024 மக்களவைத் தோ்தல்’ என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி சுந்தராபுரத்தில் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வலியுறுத்தி ‘விலையில் 2024 மக்களவைத் தோ்தல்’ என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி சுந்தராபுரத்தில் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மறுமலா்ச்சி மக்கள் இயக்கத் தலைவா் வே.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாக்குக்குப் பணம் அளிப்பதைத் தடுக்க மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்கக் கோரி கடந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

அதேபோல, நடப்பாண்டும் மறுமலா்ச்சி மக்கள் இயக்கம் சாா்பில் ‘விலையில்லா 2024 மக்களவைத் தோ்தல்’ என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி சுந்தராபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) காலை 6 மணிக்கு நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com