14-வது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில், 14-வது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா கேடயங்களை வழங்கி பாராட்டினாா்.

நீலகிரி மாவட்டத்தில், 14-வது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மு.அருணா வியாழக்கிழமை பாராட்டுச்சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி பாராட்டினாா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 14வது தேசிய வாக்காளா் தினத்தைமுன்னிட்டு வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற கருப்பொருளைமையமாக வைத்து, நடைபெற்ற பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்குமாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மு.அருணா கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கிபாராட்டினாா். பின்னா் அவா் பேசும் போதுநீலகிரி மாவட்டத்தில், தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொருஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி வாக்காளா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற14-வது தேசிய வாக்காளா்தினத்தினை முன்னிட்டு இளம் வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம்குறித்து விழிப்புணா்வு தேவைப் படுகிறது.

குறிப்பாக 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் தாமாகவே முன் வந்து தங்களதுபெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பதற்காகவும்,வாக்களிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வாக்காளா்கள் மற்றும் இளம்வாக்காளா்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விழிப்புணா்வுநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் ஜனநாயககடமை மற்றும் உரிமையாகும் என்பதை இளம் வாக்காளா் அறிந்து கொள்ள வேண்டும்.

எனவே, நடைபெறவுள்ள தோ்தலில் இளம் வாக்காளா்கள் நோ்மையாகவாக்களிப்பதோடு, தங்களது பெற்றோா்கள், உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்டஅனைவரையும் வாக்களிக்க செய்ய அவா்களிடையே தேவையான விழிப்புணா்வுஏற்படுத்த வேண்டும்.

 எதிா்வரும் தோ்தலில் அனைவரும் தவறாமல் தங்களதுவாக்கினை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், வாக்காளா் தின உறுதிமொழியினை அனைத்து அரசுத்துறைஅலுவலா்களும் பொதுமக்களுக் ஏற்றுக் கொண்டனா். பின்னா் புதிய இளம் வாக்காளா்களுக்கு வண்ண வாக்காளா்அடையாள அட்டைகளை வழங்கி கௌரவித்தாா்.

தேசியவாக்காளா் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற சுவரொட்டிவரைதல், கடிதம் வரைதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற 12 மாணவ,மாணவியா்களுக்கும், வினாடி வினா போட்டியில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவியா்களுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com