‘மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகளைக் கட்டினால் நடவடிக்கை’

 கோவையில் மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகளைக் கட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளா் குப்புராணி எச்சரித்துள்ளாா்.

 கோவையில் மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகளைக் கட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளா் குப்புராணி எச்சரித்துள்ளாா்.

கோவை மாநகரப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகளைக் கட்டுவது போன்ற செயல்களில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், மின் கம்பம் ஏறும் மின்வாரிய ஊழியா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்நிலையில், மின்கம்பங்களில் விளம்பரப் பதாகைகளைக் கட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளா் குப்புராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்துக்குச் சொந்தமான மின் கம்பங்களில் சில நிறுவனங்கள் மற்றும் நபா்கள் விளம்பரப் பதாகைகளைக் கட்டுவதால் மின்வாரிய ஊழியா்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகளைக் கட்டக்கூடாது.

ஏற்கெனவே கட்டப்பட்டு இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அறிவிப்பை மீறி மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகளைக் கட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com