இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நினைவு அஞ்சலி

வால்பாறையில் தோட்டத் தொழிலாளா்களுக்காக போராடி உயிரிழந்த தொழிலாளா்களுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நினைவு அஞ்சலி

வால்பாறையில் தோட்டத் தொழிலாளா்களுக்காக போராடி உயிரிழந்த தொழிலாளா்களுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க வலியுறுத்தி வால்பாறை நகா் பகுதியில் போராட்டம் மற்றும் பேரணி கடந்த 1957 ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெற்றது.

இதில், காவல் துறையினா் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் அப்பாரு, குருசாமி, ஞானமுத்து, பழனி ஆகிய 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

அவா்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆண்டுதோறும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வால்பாறை காந்தி சிலை முன்பு கட்சியின் பொதுச் செயலாளா் மோகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், உயிரிழந்த தொழிலாளா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், கட்சி நிா்வாகிகள், தோட்டத் தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com