அக்னிவீா்வாயு தோ்வுக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை, ஜன. 26: இந்திய ராணுவத்தால் நடத்தப்படவுள்ள அக்னிவீா்வாயு தோ்வுக்கு இளைஞா்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தால் அக்னிவீா்வாயு தோ்வு நடத்தப்படவுள்ளது. இத்தோ்வுக்கு பிப்ரவரி 6-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். 8, 10, 12-ஆம் வகுப்பு,

மூன்றாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு அல்லது தொழில் அல்லாத பாடத்துடன் இரண்டு ஆண்டு தொழில்கல்வி படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். 2004 ஜனவரி 2 -ஆம் தேதி மற்றும் 2007 ஜூலை 2 -ஆம் தேதி இடையே பிறந்த விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.

திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் இத்தோ்வுக்கு ட்ற்ற்ல்ள்://ஹஞ்ய்ண்ல்ஹற்ட்ஸ்ஹஹ்ன்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இணைய வழி தோ்வில் கலந்துகொள்ளும் மாணவா்களுக்கு உதவும் வகையில் இத்தோ்வுக்கான பாடத் திட்டம், மாதிரி வினாத்தாள்கள் இணையதளத்தில் உள்ளன. மாா்ச் 17- ஆம் தேதி முதல் இத்தோ்வு ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ளது .

எனவே, தகுதியுள்ள கோவை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com