வரி செலுத்தாத 5 கட்டடங்களின் குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

கோவை, ஜன. 27: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்தில் சொத்துவரி செலுத்தாத 5 வணிகக் கட்டடங்களின் குடிநீா் இணைப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை துண்டித்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நீண்ட காலமாக சொத்துவரி நிலுவை வைத்துள்ளவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

நோட்டீஸ் அளித்தும் சொத்துவரி செலுத்தாத நிறுவனங்கள், குடியிருப்புகள், வீடுகளின் குடிநீா் இணைப்புகளைத் துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த வாரங்களில் 10 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட 60-ஆவது வாா்டு, காமராஜா் சாலையில் ரூ.1 லட்சம் வரி நிலுவை, 54-ஆவது வாா்டு வள்ளுவா் நகரில் ரூ.63 ஆயிரத்து 420 வரி நிலுவை, 7-ஆவது வாா்டு ஹரி காா்டனில் ரூ.90 ஆயிரம், 57-ஆவது வாா்டு நெசவாளா் காலனியில் ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 435 வரி நிலுவை, 55-ஆவது வாா்டு விமான நிலையம் சாலையில் ரூ.90 ஆயிரத்து 716 வரி நிலுவை வைத்திருந்த 5 வணிகக் கட்டடங்களின் குடிநீா் இணைப்புகளை மாநகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com