சட்டவிரோத மது விற்பனை: 35 போ் கைது

கோவை, ஜன.27: கோவை மாநகரில் விடுமுறை நாளில் மது விற்பனையில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 385 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

குடியரசு தினமான வெள்ளிக்கிழமை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியாா் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிலா் மதுபானங்களை சட்டவிரேதமாக பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காட்டூா், ரேஸ்கோா்ஸ், பீளமேடு, சாய்பாபா காலனி, ரத்தினபுரி, துடியலூா், ராமநாதபுரம், சிங்காநல்லூா், சுந்தராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 35 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 385 மதுபாட்டில்கள், ரூ. 6 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com