குடியரசு தினம்: விடுமுறை அளிக்காத 137 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை, ஜன. 27: குடியரசு தினத்தன்று, கோவை மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 137 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடியரசு தினத்தன்று, கோவை மாவட்டத்துக்குள்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 173 நிறுவனங்களில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 68 கடைகள், 69 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 137 உரிமையாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் மீது சட்டப்பூா்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தொழிலாளா்கள் எண்ணிக்கையைப் பொறுத்து குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com