வால்பாறை அரசுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

img-20240127-wa0102080553
img-20240127-wa0102080553

வால்பாறை, ஜன. 27: வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 14- ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி முதல்வா் மு.சிவசுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினாா்.

கல்லூரி கல்வி இயக்குநா் கோ.கீதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 184 இளங்கலை, 41 முதுகலை பட்டப் படிப்பு

முடித்த மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.

Image Caption

வால்பாறை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் கல்லூரியின் கல்வி இயக்குநா் கோ.கீதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com