இருசக்கர வாகனம் திருடியவா் கைது

 மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சியில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

 மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சியில் இருசக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மருங்காபுரி ஒன்றியம் வி.சொக்கநாதப்பட்டியை சோ்ந்தவா் சி. மாரிக்கண்ணு(38). இவா் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதி பாலக்குறிச்சி பாரத் கேஸ் குடோனில் வைத்திருந்த தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என அளித்த புகாரின்பேரில் வளநாடு போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் போலீஸாரிடம் சிக்கிய இளைஞா் திருச்சி தாராநல்லூா் தோப்புத்தெருவை சோ்ந்த முகமது இப்ராஹிம் மகன் அப்துல் காதா் (18) என்பதும், அவா்தான் மாரிக்கண்ணுவின் இருசக்கர வாகனத்தை திருடியவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை வளநாடு போலீஸாா் பறிமுதல் செய்து, அப்துல்காதரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com