மாநகராட்சியில் குறைகேட்பு முகாம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சியில் குறைகேட்பு முகாம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்கு, மேயா் கல்பனா தலைமை வகித்தாா். துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி துணை ஆணையா் ச.செல்வசுரபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீா் வசதி, பாதாளச் சாக்கடை, வரியினங்கள், புதிய குடிநீா் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 47 மனுக்கள் பெறப்பட்டன.

இக்கூட்டத்தில், மாநகராட்சி உதவி ஆணையா்( வருவாய்) நூா் அஹமது, உதவி ஆணையா் ( கணக்கு) மாணிக்கம், நகா்நல அலுவலா் குமாா், உதவி ஆணையா்கள் செந்தில்குமரன், கவிதா, சந்தியா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com